சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்பட பலர் நடித்துள்ள படம் ‘கத்திசண்டை’. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’ வந்ததால் ‘கத்திசண்டை’ ‘ரிலீஸ்’ தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அடுத்து நவம்பர் 18-ந் தேதி விஷால் படம் திரைக்கு வர தயாரானது. இந்த நிலையில் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால், சில்லரை மாற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், தியேட்டர்களில் கூட்டம் குறைந்தது. எனவே பல படங்களுடன் இந்த படத்தின் ‘ரீலீஸ்’ தேதியும் தள்ளிப்போனது. இப்போது ‘கத்திசண்டை’ பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு விஜய் நடிக்கும் ‘பைரவா’ படம் ‘ரிலீஸ்’ ஆக இருக்கிறது. அதே நாளில் ‘கத்திசண்டை’யும் வெளியாவதால் விஜய்-விஷால் படங்கள் ஒரே நேரத்தில் மோத இருக்கின்றன.
ஏற்கனவே, 2007-ம் ஆண்டு விஜய்யின் ‘போக்கிரி’, விஷாலின் ‘தாமிரபரணி’ படங்கள் மோதின. 2014-ல் தீபாவளியன்று இவர்களின் ‘கத்தி’, ‘பூஜை’ படங்கள் மோதின. இப்போது 3-வது முறையாக வரும் பொங்கல் அன்று விஜய்-விஷால் படங்கள் நேரடியாக மோதுகின்றன.
0 comments:
Post a Comment