Wednesday, November 30, 2016

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்


201611301433185531_vaikom-vijayalakshmi-married-next-year_secvpfபிரபல பாடகியும், வீணை இசைக்கலைருமான வைக்கம் விஜயலட்சுமி, கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு 35 வயது ஆகிறது. இந்நிலையில், இவருக்கும் கோழிக்கோட்டை சேர்ந்த சந்தோஷ் என்னும் இசைக் கலைஞருக்கும் டிசம்பர் மாதம் 13-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்த வருடம் மார்ச் 29-ந் தேதி இவர்களது திருமணம் நடக்கவிருக்கிறது.


பார்வை குறைபாடு உள்ள விஜயலட்சுமி, தனது தனித்துவமான குரலுக்காகவும், பாடும் திறனுக்காகவும் பலராலும் போற்றப்படுபவர். மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பாகுபலி’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.


இவர் சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரசிவாஜி’ படத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இணையதளங்களில் வைரலாக பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment