தீவிர படவேட்டையில் அபிநயஸ்ரீ!
27 நவ,2016 - 09:52 IST
விஜய்-சூர்யா நடித்த பிரண்ட்ஸ் படத்தில் விஜய்யை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தில் அறிமுகமானவர் அபிநயஸ்ரீ. அந்த படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த அவர் பின்னர், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் கவர்ச்சிகரமான கேரக்டர்களில் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் ஒருகட்டத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறையவே, நடன மாஸ்டராக சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் அபிநயஸ்ரீ.
இந்நிலையில், மெகா குத்தாட்ட நடிகையான அவரது அம்மா அனுராதா, இப்போதும் வில்லியாக சில படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து வருவதை அடுத்து அபிநயஸ்ரீக்கும் மீண்டும் தான் திரையில் தோன்ற வேண்டும் என்ற ஆசை அதிகரித்துள்ளது. அதனால் பலசுற்று பெருத்து விட்ட தனது உடல் எடையை குறைத்துள்ள அவர், மறுபடியும் அரிதாரம் பூச வாய்ப்பு கொடுங்கள் என்று சில முன்னணி டைரக்டர்களிடம் படவேட்டை நடத்தி வருகிறார்.
0 comments:
Post a Comment