தமிழ் படத்திற்காக 16 வருடம் காத்திருக்கும் அபிஷேக்
25 நவ,2016 - 18:23 IST
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். அமிதாப் புகழ்பெற்ற அளவுக்கு அபிஷேக்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வர முடியவில்லை. தன் தந்தை நடிக்கும் அளவுக்கு கூட அவரிடம் படங்கள் இல்லை. இந்நிலையில், அபிஷேக் பச்சன் தனது டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ரசிகர்கள் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் பொறுமையாக பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர், உங்களுக்கு தமிழ் படத்தில் நடிக்கும் ஆசை உள்ளதா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அபிஷேக்... ‛‛16 வருடமாக தமிழ் படங்களில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன், தமிழ் படத்தில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்'' என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment