உதட்டை சர்ஜரி செய்யும் அளவுக்கு என்னிடம் பணமில்லை - வாணி கபூர்
29 நவ,2016 - 15:13 IST
‛ஆஹா கல்யாணம்' எனும் தமிழ்ப்படத்தில் நடித்த நடிகை வாணி கபூர், தற்போது ரன்வீர் சிங்குடன் ‛பெபிகர்' எனும் படத்தில் நடித்துள்ளார். காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரன்வீரும், வாணியும் அதீத நெருக்கம் காட்டி ஏகப்பட்ட முத்தக்காட்சியில் எல்லாம் நடித்திருக்கிறார்கள். இப்படம் அடுத்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில் இருதினங்களுக்கு முன்னர் சென்சாருக்கு சென்ற இப்படம் அதிக முத்தக்காட்சியில் ‛யு/ஏ' சான்று பெற்று வந்தது.
இந்நிலையில் பெபிகர் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வாணியிடத்தில், நீங்கள் உதடு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக செய்தி வெளியானதே என்று கேட்டபோது, அதை முற்றிலுமாக மறுத்தார். இதுப்பற்றி வாணி கூறியிருப்பதாவது... ‛‛நான் உதடு அறுவை சகிச்சை செய்து கொண்டதற்கான விஷயங்கள் எதுவும் என் உதட்டில் தெரிகிறதா... அப்படி நான் செய்வதாக இருந்தால் நானே அதை தெரிவிப்பேன். தற்போதைய சூழலில் அப்படியொரு சிகிச்சை செய்யும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. இதுபோன்ற அனாவசிய விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்ய மாட்டேன். எங்கிருந்து இப்படியொரு செய்தி எல்லாம் பரவுகிறது என தெரியவில்லை என்றார்.
பெபிகர் படத்தை ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார், இப்படம் வருகிற டிசம்பர் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது.
0 comments:
Post a Comment