Monday, November 28, 2016

முத்தக்காட்சியால் ‛பெபிகர் படத்திற்கு யு/ஏ சான்று


முத்தக்காட்சியால் ‛பெபிகர் படத்திற்கு யு/ஏ சான்று



28 நவ,2016 - 17:23 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டில் இருக்கும் இளம் முன்னணி ஹீரோக்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். இவர், பாஜிராவ் மஸ்தானி எனும் வரலாற்று சூப்பர் ஹிட் படத்தில் நடித்து இருந்தார். இதைத்தொடர்ந்து ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் ‛பெபிகர் எனும் படத்தில் நடித்துள்ளார். ரன்வீர் ஜோடியாக வாணி கபூர் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ‛பெபிகர் டிரைலர் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றதுடன், படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கிறது.

தற்போது ‛பெபிகர் படத்திற்கு சென்சார் போர்டு யு / ஏ சான்றிதழ் கொடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகின. படத்தில் ரன்வீர் மற்றும் வாணியிடையே நிறைய முத்த காட்சிகளும், நெருக்கமான காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. கிட்டத்தட்ட படத்தில் 22 முத்த காட்சிகள் இடம் பெற்று இருக்கிறதாம். அதனால் தான் படத்திற்கு யு / ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருப்பதாக சென்சார் போர்டு தெரிவித்து இருக்கிறது. .

‛பெபிகர் படம் அடுத்த மாதம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


0 comments:

Post a Comment