பைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பார் என்று தகவல்கள் வந்தன.
ஆனால், தற்போது இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் கமிட் ஆகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதன் சூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பை கலிபோர்னியாவில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவில் நடத்தவிருக்கிறார்களாம்.
இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இங்கே படமாக்கப்பட்டதில்லை.
எனவே இந்த பெருமை இயக்குனர் அட்லிக்கு கிடைக்கவுள்ளது.
‘லைட்ஸ் அவுட்’, ‘கான்ஜுரிங் 2’, ‘காட்ஸில்லா’, ‘ஹாரிபாட்டர்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்கள் இங்கே படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment