சினிமாவில் தான் யாரோ ஒருவர் திடிரென வந்து ஹீரோவை இவன் என்னுடைய குழந்தை. கும்பகோணம் கும்பாபிசேகத்துல தொலச்சிபுட்டோம், எக்மோர் ரெயில்வே ஸ்டேஷன்ல தொலச்சிபுட்டோம் என ட்விஸ்டை வைப்பார்கள்.
ஆனால், வரவர நாட்டில் என்னென்ன கூத்துக்கள் நடக்கும் என்றே தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படித்தான் நடந்துள்ளது இங்கு ஒரு விஷயம்.
நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என்று சிவகங்கையை சார்ந்த தம்பதிகள் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர், இதை தொடர்ந்து தனுஷை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதில் தங்கள் மகன் 16 வயதில் வீட்டை விட்டு ஓடியதாக கூறியுள்ளனர், ஆனால், தனுஷ் குழந்தையிலிருந்து கஸ்தூரிராஜாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

Summary in English : Kashthuri Raja Proved Dhanush is his Son by his Childhood Photo.
0 comments:
Post a Comment