2017, ஜூன் 9ஆம் தேதி ‛ராப்தா' ரிலீஸ்
23 நவ,2016 - 17:34 IST
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்த படம் ‛எம். எஸ் தோனி'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுஷாந்த் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் தினேஷ் விஜன் இயக்கத்தில் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‛ராப்தா' என்று பெயரிட்டுள்ளனர். ‛ராப்தா' படத்தில் சுஷாந்த் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் . இது காதல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் ‛ராப்தா' படம் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‛ஜாலி எல்.எல்.பி 2' படத்துடன் வெளியாகும் என்று கூறியிருந்தனர். ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் நான்கு மாதங்கள் தள்ளி போட்டுள்ளனர். அதன்படி, இந்த படம் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது. ராப்தா படத்தின் பெரும்பாலான காட்சிகள் புதாபெஸ்ட், மொரிஷியஸ் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment