இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா.
படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் சிவகுமாரின் மகன் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால் நடிக்க வருவதற்கு முன்பு, இவர் சிவகுமாரின் மகன் என்பதை யாரிடமும் சொல்லாமல் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பல கிலோ மீட்டர் வரை பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வாராம்.
ஆபிஸை சுத்தம் செய்வது போன்ற வேலைகளிலும் ஈடுபடுவாராம்.
சூர்யாவின் இந்த கஷ்டங்களை கூட்டத்தில் ஒருத்தன் பாடல் வெளியீட்டு விழாவில் பேசினார் சிவகுமார்.
ஞானவேல் இயக்கியுள்ள கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த் நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.
0 comments:
Post a Comment