நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம்
27 நவ,2016 - 17:54 IST
நடிகர் சங்கத்தில் இருந்து ராதாரவி, சரத்குமார் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் சரத்குமார் ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டம் நடந்த இடத்திற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விஷால் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து ராதாரவி, சரத்குமார் ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. முதல்வர் ஜெ., விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். முறையான ஒப்புதலுடன் தான் நடிகர் சங்க பொதுக்குழு நடக்கிறது. நடிகர், நடிகைகள் பிரச்னைகளை நினைத்து தற்கொலை கூடாது. உங்களுடைய பிரச்னைகளை நடிகர் சங்கத்திடம் தெரிவியுங்கள். கவுன்சிலிங் மூலம் பிரச்னைகள் தீர்க்கப்படும். யார் தடுத்தாலம் நடிகர் சங்க கட்டடம் கட்டப்படும் என்றார்.
0 comments:
Post a Comment