Sunday, November 27, 2016

கோடிட்ட இடங்களை நிரப்புவது மெலோடிக்கா இசை கருவி


கோடிட்ட இடங்களை நிரப்புவது மெலோடிக்கா இசை கருவி



27 நவ,2016 - 14:07 IST






எழுத்தின் அளவு:








பார்த்திபன் தற்போது இயக்கி வரும் படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. சாந்தனு பார்வதி நாயார், தம்பி ராமய்யாவுடன் பா£ர்த்திபனும் நடிக்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் நாயகன் சாந்தனு ஜெர்மன் இசை கருவியான ªலோடிக்கா என்ற கருவியை இசைக்கும் கலைஞனாக நடித்திருக்கிறார். இது வாயில் விசில் போன்று ஊதிக்கொண்டே சிறிய ஆர்மோனியம் போன்ற இசைகருவியை மீட்டுவது. இந்தப் படத்தின் பெரும்பகுதி பின்னணி இசையை மெலோடிக்கா இசை கருவி கொண்டே அமைத்திருக்கிறார் இசை அமைப்பாளர் சத்யா. இதன் இசை வெளியீட்டு விழா பார்த்திபனின் குரு கே.பாக்யராஜின் 65வது பிறந்த நாள் அன்று நடக்க இருக்கிறது.

இதுகுறித்து இசை அமைப்பாளர் சி.சத்யா கூறியதாவது: பொதுவாகவே பார்த்திபன் சாரின் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு இசையமைப்பது என்பது சற்று கடினமான காரியம். அந்த வகையில், கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு இசையமைத்தது எனக்கு சவாலாகாவே இருந்தது.மெலோடிக்கா எனப்படும் இசை கருவியை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை களம் நகரும். எனவே பெரும்பாலான காட்சிகளுக்கு அந்த குறிப்பிட்ட கருவியின் இசையை தான் நாங்கள் பின்னணி இசைக்காக பயன்படுத்தி உள்ளோம். இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். நிச்சயமாக பார்த்திபன் சார் வரைந்திருக்கும் கோடிட்ட இடங்களை நிரப்ப என்னுடைய இசை பக்கபலமாக இருக்கும் என நம்புகிறேன். என்கிறார் இசையமைப்பாளர் சி சத்யா.


0 comments:

Post a Comment