தொலைகாட்சிகள் தொல்லைகாட்சிகளாக மாறி ஆகிவிட்டது வருடங்கள் பல. அதெல்லாம் ஓரங்கட்டிவிட்டு TRP-ரேட்டிங் தான் முக்கியம் நாங்கள் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்புவோம் என போட்டி போடும் சேனல்கள் சில.
விந்துவை அடக்கு, ஆண்மைய அடக்கு என்ற சாமியாரின் நிகழ்ச்சி ஒரு பக்கம். விந்துவை அதிகரிக்க , ஆண்மையை பெருக்க என்று குடும்ப பெண்களை வைத்து அருவருப்பான விளம்பரங்கள் ஒரு பக்கம், இளைஞர்களை திருமண வாழ்கையின் மீது ஒரு வித போலியான அச்ச உணர்வை அள்ளி வீசிக்கொண்டிருக்க. குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு ரிமோட்டை எடுத்து சேனலை திருப்பும் போது மனதில் ஏனோ ஒரு வித பக் பக் உணர்வு.
எந்த சேனல்ல எந்த கருமத்த ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறானோ என்ற பயம் எதற்கு? இதற்க்கு யார் காரணம்? வேறு யாருமே இல்லை மக்கா.. நாம தான். இப்படி தான் அனைத்து பழியையும் நம் மீது தூக்கி போடுவார்கள் பல அறிவு ஜீவிகள்.
ஒரு குடும்பத்தை கூட்டிவந்து ஏ.சி ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான சோஃபா செட்டில் அலேக்ககாக அமர வைத்து, அவர்கள் எழுப்பும் கேள்வியும் அதற்க்கு வந்திருபவர்கள் அளிக்கும் பதிலும். அடக்கடவுளே..! இப்படியுமா? நடக்கும் என மக்களை பிரமிக்க வைத்து, காசு பார்க்கும் ஊடங்களுக்கு மத்தியில் அல்லாடுகின்றன நமது குடும்பங்கள்.
இதில், கொடுமை என்னவென்றால், ஒரு வேளை நம் குடும்பத்திலும் அப்படி நடக்குமோ? என் மனைவியும் அப்படி பட்டவளாக இருப்பாளோ? என்னுடையை புருஷன் இந்த மாதிரியான ஆளாக இருந்தால்? என்ன செய்வது என்று புதுமண தம்பதிகள் முதல் அறுபது வயது கணவன் மனைவியிடையே ஆபாத்தன விஷம சந்தேகத்தை பரப்புகின்றன, இப்படியான நிகழ்சிகள்.
போதாது என்று, நிகழ்ச்சியை இன்னும் பரப்பாக்க ஆபாசமான வார்த்தகளை பேசவைத்து அதை சென்சார் செய்வது போல் பீப் ஒலியை போட்டு பாவலா காட்டுகின்றனர். கட்டபாஞ்சயத்து செய்வது குற்றமென்றால் இதுவும் சட்டப்படி குற்றமே, ஆனால் இதற்க்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் கவுன்சிலிங் (கலந்தாய்வு).
கவுன்சிலிங் என்றால் ஒன்று அல்லது இரண்டு மனோதத்துவம் படித்த நிபுணர்கள் ஒருவரின் மனநிலையை புரிந்து பிறகு அதற்கேற்றார் போல அவருடைய பிரச்னைகளுக்கு தீர்வு செல்வது ஆகும். தமிழே சரியாக பேச தெரியாத ஒரு நடிகையை வைத்து கொண்டு இவர்கள் செய்யும் கூத்திற்கு பெயர் கவுன்சிலிங் இல்லை. இதனால் பிரச்சனைகள் எழக்கூடும், இதனால் யாரவது நீதிமன்றத்தில் சேனலை முடக்க சொல்லி வழக்க போட்டால் என்ன செய்வது? என அறிந்த இந்த ஊடகங்கள் ஒரு அறிவிப்பை இப்படியான நிகழ்சிகளை ஆரம்பிக்கும் முன்னர் கண் இமைக்கும் நேரத்தில் மின்னி மறைய செய்கின்றன. இதனை, பலரும் கவனித்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படியான அறிவிப்புகளில் ஒன்று இதோ,
தொலைக்காட்சிக்கும் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கும் எந்த விதத்திலும் பொறுப்பில்லை என்றால் எதற்கு இப்படி வன்மமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். எல்லாம் பணத்திற்காக மட்டும் தான் நண்பர்களே. படிப்பறிவுள்ளவர்களை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. ஏனென்றால் அவர்களுக்கு நன்றாக தெரியும் எதற்காக இப்படியான நிகழ்சிகளை ஒளிபரப்புகிறார்கள் என்று, ஆனால், படிப்பறிவில்லாதவர்கள் இப்படியான, நிகழ்சிகளில் கவனத்தை செலுத்துவதை ஆதரிக்க வேண்டாம், அப்படி செலுத்தினால் அவர்கள் குடும்பத்தில் உள்ள நபர்களின் மீது அவர்களுக்கு தெரியாமலையே ஒரு வன்மமான சந்தேகத்தை விதைத்து விடும் இந்த விஷம நிகழ்சிகள்.
Summary in English : An Short Article about How TV Reality shows confusing people about their families and family members in recent days.
0 comments:
Post a Comment