அனிருத்தால் கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த வாய்ப்பு
25 நவ,2016 - 15:37 IST
விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் வெளிவந்ததை அடுத்து, குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டவர் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது விஜய்யுடன் 'பைரவா' படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்து சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.
'பைரவா' படத்தில் கீர்த்தி சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால், தற்போது 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யாவுடன் நடித்து வரும் கீர்த்தி இடையிடையே பைரவா படத்தின் டப்பிங்கை முடித்து கொடுப்பதாக சொல்லி இருக்கிறார். இந்நிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் 25 ஆவது படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி இருக்கிறார். த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அனிருத்தும் சிவகார்த்திகேயனும் நண்பர்கள். சிவகார்த்திகேயனுக்கு கீர்த்தி சுரேஷ் நெருக்கமானவர். அந்த அடிப்படையில் பவன்கல்யாணிடமும் இயக்குநர் த்ரிவிக்ரமிடமும் கீர்த்தி சுரேஷை அனிருத் சிபாரிசு செய்திருக்கிறார். அவரது சிபாரிசிலேயே பவன் கல்யாண் படம் கீர்த்தி சுரேஷுக்குக் கிடைத்திருக்கிறது.
0 comments:
Post a Comment