Saturday, November 26, 2016

கே.சுபாஷ் கதையில் விஷால், கார்த்தி


கே.சுபாஷ் கதையில் விஷால், கார்த்தி



26 நவ,2016 - 17:45 IST






எழுத்தின் அளவு:








தமிழ்த் திரையுலகில் கடந்த சில மாதங்களாக பலருக்கும் உதவி செய்யும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார் நடிகர் விஷால். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் மற்றவர்களும் அவர்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகிறார். பெண்கள் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி உதவிகளையும் வழங்கி வருகிறார். எதிர்காலத்தில் அரசியலில் இறங்குவதற்கான அடித்தளமாக அவை பார்க்கப்பட்டாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பெரிய மனது அவரை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

சில தினங்களுக்கு முன்பு மறைந்த இயக்குனர் கே.சுபாஷ் இல்லத்திற்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார் விஷால். அதோடு அவர்தான் தன்னை முதன் முதலாக நடியுங்கள் சொன்னவர் என்பதையும் நன்றி மறக்காமல் சொன்னார்.

நடிகர் சங்கத்தில் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் பதவியேற்றதிலிருந்தே நடிகர் சங்கத்திற்காக தனி படம் ஒன்றில் விஷால், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால், இதுவரை அது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்ததில்லை.

கே.சுபாஷ் மறைவுக்குப்பின் டிவிட்டரிலும் தன்னுடைய வருத்தத்தைப் பகிர்ந்து கொண்ட விஷால், கே.சுபாஷ் அவர்களின் கடைசி கதையில் கார்த்தியுடன் சேர்ந்து நடிப்பது பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை பிரபுதேவா இயக்க உள்ளார். கே.சுபாஷ் இயக்கிய 'நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில், சுயம்வரம், 123,' ஆகிய படங்களில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆரம்பமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 comments:

Post a Comment