எம்ஜிஆர் நடித்த, உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன், அடிமைப் பெண் உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் எம்ஜிஆர் பிக்சர்ஸ்.
அவரின் மறைவுக்குப் பிறகு இந்நிறுவனம் படங்களைத் தயாரிப்பதை நிறுத்திக் கொண்டது.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் படத்தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
எனவே அதற்கான நாயகனை தேடுதல் வேட்டையில் இந்நிறுவனம் இறங்கியது.
அதன்படி புதிய படத்தில் நடிக்க ’ஜெயம்’ ரவியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
0 comments:
Post a Comment