மெக்சிகன் இசைக்குழுவுடன் இணைந்த துல்கர் சல்மான்..!
29 நவ,2016 - 16:09 IST
'பிக் பி', 'அன்வர்' புகழ் அமல் நீரத் டைரக்சனில் துல்கர் நடிப்பில் ஏற்கனவே பெயரிடப்படாமல் உருவாகிவந்த படம் இடையில் மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.. ஸாரி.. தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. பிரச்சனை என ஏதுமில்லை.. இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக தொடர்ச்சியாக சில நாட்கள் வெளிநாட்டில் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. படப்பிடிப்பு நடத்தும் ஏற்பாடுகளை செய்யவும் கொஞ்ச நாட்கள் தேவைப்பட்டது..
இந்த கேப்பில் தான் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் குறுகிய கால தயாரிப்பாக உருவான 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்கிற படத்தில் நடித்தார் துல்கர்.. அந்தப்படம் முடிந்து வரும் டிச-16ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.. இந்தநிலையில் அமல் நீரத் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மெக்ஸிகோவில் துவங்கி நடைபெற்று வருகிறது.. இங்கு ஒரு பாடல் உட்பட சில காட்சிகளையும் படமாக்க இருக்கிறார்கள். இந்தப்பாடல் காட்சியில் இடம்பெறுவதற்காக அங்குள்ள மெக்சிகன் இசைக்குழு ஒன்றிடம் பேசி, அவர்களை வைத்து படப்பிடிப்பும் நடத்தி வருகிறார்கள்..
0 comments:
Post a Comment