சதீசுக்கு தடைபோட்ட கீர்த்தி சுரேஷின் தாய்குலம்!
24 நவ,2016 - 09:03 IST
விஜய்யின் பைரவா படத்தின் பூஜையில் கலந்து கொண்டபோது, விஜய், கீர்த்தி சுரேஷ், காமெடியன் சதீஷ் ஆகியோர் கழுத்தில் மாலையுடன் நிற்பது போன்ற போட்டோக்கள் வெளியானது. ஆனால், அதில் கீர்த்தி சுரேஷ்க்கு அருகில் சதீஷ் நின்ற போட்டோக்களை வெளியிட்டு அவர்கள் திருமணம் செய்து கொண்ட தாக இணையதளங்களில் வைரலாக செய்தி பரவியது. அதையடுத்து கீர்த்தி சுரேஷ்தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, அது பைரவா பட பூஜை படங்கள் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த வதந்தி காரணமாக ஒரு வார காலம் பரபரப்பான காமெடியனாக இருந்தார் சதீஷ்.
அதோடு, அந்த செய்தி அடங்கிய நேரத்தில் ரெமோ படத்தின் நன்றி விழா மேடையில் பேசியபோதும், அந்த செய்தி குறித்து மீண்டும் பேசி அடுத்த பரபரப்புக்கு தயாரானார் சதீஷ். ஆனால் அவர் பேசும்போது மேடையில் அமர்ந்திருந்த கீர்த்தி சுரேஷின் முகத்தில் இறுக்கம் தெரிவதைப்பார்த்ததும் அந்த பேச்சு சுருக்கமாக முடித்துக்கொண்டார் சதீஷ். ஆனால் அதையடுத்து, கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா, சதீஷை தொடர்பு கொண்டு, அந்த வதந்தியை அதோடு விட்டு விடுங்கள் மீண்டும் மீண்டும் கிளறி விட வேண்டாம். இப்படி செய்வதால் எனது மகளின் ஹீரோயினி இமேஜ்க்கு பங்கம் ஏற்படக்கூடும் என்று அன்போடு கேட்டுக்கொண்டாராம். மேலும், என் மகள் சினிமாவில் அறிமுகமாகி இத்தனை ஆண்டுகளில் எந்த நடிகருடனும் அவர் கிசுகிசுக்கப்பட்டதில்லை. இனிமேலும் கிசுகிசு வராது. அந்த அளவுக்கு அவர் அனைவரிடமும் கவனமாக பழகி வருகிறார் என்றும் கூறினாராம்.
0 comments:
Post a Comment