அமெரிக்கா சென்ற விக்ரம்! படப்பிடிப்பு தள்ளி வைப்பு!!
28 நவ,2016 - 08:49 IST
இருமுகன் படத்திற்கு பிறகு ஹரி, கெளதம்மேனன் போன்ற முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடிப்பதற்கு விக்ரம் தயாரானபோதும், முன்னதாக, கரிகாலன் படத்திற்கு போட்ட ஒப்பந்தம் காரணமாக அந்த படத்திற்கு கொடுத்த கால்சீட்டில் வாலு பட டைரக்டர் விஜயசந்தர் இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்த படத்திற்கான கதை ஓகே செய்யப்பட்டு டிசம்பர் 15ந்தேதி படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதனால் கதாநாயகி, நடிகர் நடிகைகள் தேர்வு துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இப்போது அமெரிக்காவில் படித்து வரும் தனது மகன் துருவை பார்ப்பதற்காக திடீரென்று அமெரிக்கா சென்றுள்ளாராம் விக்ரம். அவரது இந்த திடீர் பயணம் காரணமாக, டிசம்பர் 15-ந்தேதி நடக்கயிருந்த படப்பிடிப்பை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்து விட்டனர். இதன் காரணமாக, டிசம்பர் 15-ந்தேதியை முன்வைத்து ஒப்பந்தம் செய்திருந்த நடிகர் நடிகைகளின் கால்சீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாம்.
0 comments:
Post a Comment