சர்ச்சை நாயகன்
01 டிச,2016 - 01:23 IST
சிம்புவுக்கு பின், அதிகம் சர்ச்சையில் சிக்கும் நடிகராக உருவெடுத்து வருகிறார், ஜி.வி.பிரகாஷ். சமீபத்தில், நடிகர் விஜயை பாராட்டி அறிக்கை விட்டதால், அஜீத் ரசிகர்கள், சமூக வலைதளங்களில், அவரை துவைத்து எடுத்தனர். இப்போது, தனுஷ் ரசிகர்களின் கோபப் பார்வைக்கு அவர் ஆளாகியுள்ளார். தனுஷ் ஹீரோவாக நடித்த பல படங்களுக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். ஆனால், சமீபகால தனுஷ் படங்களுக்கு, ஜி.வி., இசையமைக்கவில்லை. இதனால், தனுஷ் ரசிகர்கள், அவரை பற்றி சமூக வலைதளங்களில் கிண்டலடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு, ஜி.வி.பிரகாஷும் பதிலடியாக சில கருத்துக்களை தெரிவித்ததாகவும், இது, சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment