Wednesday, November 30, 2016

தனுஷின் அப்பா கிருஷ்ணமூர்த்தி; ஆதாரத்தை வெளியிட்ட விசு


Director Visu confirms dhanush parentsசில மாதங்களாவே கஸ்தூரி ராஜாவிடம் உள்ள தனுஷ் எங்கள் மகன் என சொந்தம் கொண்டாடி வருகிறன்றனர் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர்.


இந்த விசாரணைக்காக தனுஷ் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு இது குறித்து ஒரு போட்டோவை வெளியிட்டு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில்… “நான் இயக்கிய மணல் கயிறு முதல் சகலகலா சம்பந்தி வரை என்னுடன் உதவி இயக்குனராக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி.

அதன்பின்னர் என் ராசாவின் மனசிலே படத்தை அவர் இயக்கும்போது தன் பெயரை கஸ்தூரி ராஜா என மாற்றிக் கொண்டார்.

தனுஷ், செல்வராகவன் உள்ளிட்ட அவரின் குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும்.

நடிகர் தனுஷ் அவர்கள், கிருஷ்ணமூர்த்தி என்ற கஸ்தூரிராஜாவின் மகன்தான்” என்று தெரிவித்துள்ளார்.

அந்தப் போட்டோ இதுதான்…



0 comments:

Post a Comment