பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் சூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது.
இறுதியாக பூசணிக்காய் உடைத்து நிறைவு செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இப்பட படப்பிடிப்பு தளத்தின் அருகே ரஜினியின் 2.ஓ பட சூட்டிங் நடந்து வருவதை அறிந்த விஜய், அங்கே சென்று மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்து இருக்கிறார்.
இவர்கள் சந்தித்தால் நிச்சயம் அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி இருக்கும்.
ஆனால், 2.0 பட மேக்கப்பில் ரஜினி இருந்ததால், எந்த புகைப்படமும் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment