நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு தடைகேட்ட வழக்கு தள்ளுபடி
26 நவ,2016 - 10:05 IST
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நாளை காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள லயோலா கல்லூரி அரங்கில் நடக்கிறது. இதற்கு தடைகேட்டு நடிகர் சங்க உறுப்பினர் ராஜேந்திரன் சென்னை 11வது சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் சங்கத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. "நடிகர் சங்க பொதுக்குழு சங்கத்தின் விதிமுறைப்படி நடத்தப்படுகிறது. அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. 1700 பேர் அமரக்கூடிய அரங்கம் ஏற்பாடு செய்யய்பட்டுள்ளது. பார்க்கிங் வசதி, பாதுகாப்பு வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு விளம்பர நோக்கத்தில் தொடரப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
0 comments:
Post a Comment