Monday, November 28, 2016

மூன்று நாளில் ரூ.32 கோடி வசூலித்த ‛டியர் ஜிந்தகி'


மூன்று நாளில் ரூ.32 கோடி வசூலித்த ‛டியர் ஜிந்தகி'



28 நவ,2016 - 17:20 IST






எழுத்தின் அளவு:








‛இங்கிலீஷ் விங்கிலீஷ்' எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய கவுரி ஷிண்டே, ஷாரூக்கான், ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர், அலி ஜாபர் மற்றும் குணால் கபூர் ஆகியோரை வைத்து ‛டியர் ஜிந்தகி' எனும் படத்தை இயக்கினார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படம் வெளியான மூன்று நாட்களில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மூன்று நாட்களில் சுமார் ரூ. 32.50 கோடி வசூலாகியுள்ளது. வெள்ளிக்கிழமை ரூ.8.75 கோடியும், சனிக்கிழமை ரூ.11.25 கோடியும், ஞாயிறு அன்று ரூ.12.50 கோடியும் வசூலித்து இருக்கிறது.

‛டியர் ஜிந்தகி' படத்தில் ஷாரூக் கெஸ்ட் ரோலில் மாதிரி நடித்திருந்தாலும் அவரது நடிப்பு எல்லோராலும் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. படத்திற்கு இந்தளவு வசூல் கிடைக்க ஷாரூக்கின் நடிப்பு தான் கரணம் என்றும் அவராலேயே மேலும் வசூல் அதிகரிக்கும் என்று விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. சுமார் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் அதை தாண்டி அதிக வசூலை கொடுக்கும் என்கிறார்கள்.


0 comments:

Post a Comment