Saturday, November 26, 2016

'துருவா' டிரைலரின் தனிப் பெரும் சாதனை


'துருவா' டிரைலரின் தனிப் பெரும் சாதனை



26 நவ,2016 - 17:36 IST






எழுத்தின் அளவு:








தெலுங்குத் திரையுலகில் முதல் முறையாக ஒரு டிரைலர் நிகழ்த்தியுள்ள சாதனையாக ராம் சரண் நடித்துள்ள 'துருவா' பட டிரைலர் ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற 'தனி ஒருவன்' படத்தை தெலுங்கில் 'துருவா' என்ற பெயரில் எடுத்து முடித்துள்ளனர். ராம் சரண், ரகுல் ப்ரீத், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் நேற்று மாலை யு டியூபில் வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியான நான்கரை மணி நேரத்திற்குள்ளேயே 1 மில்லியன் பார்வைகளைப் பெற்று தனிப் பெரும் சாதனையைப் படைத்துள்ளது.

இதற்கு முன் என்டிஆர் நடித்து வெளிவந்த 'ஜன்தா காரேஜ்' படம் பத்தரை மணி நேரத்தில் படைத்த சாதனையை 'துருவா' முறியடித்துள்ளது. இன்று மாலை 5.30 மணி வரை 18 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. தெலுங்குத் திரையுலகில் ஒரு படம் இந்த அளவிற்கு சாதனை புரிந்து வருவதை ராம்சரண் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏற்கெனவே இந்தப் படத்தின் இசைக்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

'பாகுபலி' இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளிவந்த 'மகதீரா' படம்தான் தெலுங்கில் முதல் முறையாக மிகப் பெரும் வசூலைப் பெற்ற படமாக இருந்தது. அதன் பின்தான் மற்ற படங்கள் அந்த சாதனையை நோக்கியும், கடந்தும் பயணிக்க ஆரம்பித்தன.

இப்போது 'துருவா' படம் வெளிவந்தால் அது மீண்டும் ஒரு மிகப் பெரிய வசூல் சாதனையைப் புரியும் என தெலுங்குத் திரையுலகினர் எதிர்பார்ப்பில் உள்ளார்கள். டிசம்பர் மாதம் 'துருவா' படம் திரைக்கு வருகிறது.


0 comments:

Post a Comment