விக்ரமிடம் மொத்த கால்சீட் கேட்ட கெளதம்மேனன்!
27 நவ,2016 - 10:48 IST
சிம்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வந்தபோதே தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தையும் இயக்கி வந்தார் கெளதம் மேனன். அந்த படம் இன்னும் முடியாத நிலையில், அடுத்தபடியாக விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக அறிவித்தவர், தனது பாணியில் ஒன்லைனையும் விக்ரமிடம் சொல்லி, ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு இயக்கப்போவதாக சொன்னார். அதைக் கேட்ட விக்ரம், அந்த கதையில் அதிக இம்ப்ரஸ் ஆகி விட்டார்.
அதனால் வாலு பட டைரக்டர் விஜயசந்தர் படத்தில் நடித்துக்கொண்டே கெளதம்மேனன் படத்திலும் நடிக்க முடிவெடுத்த விக்ரம், இரண்டு படங்க ளுக்கும் கால்சீட்டை பிரித்துக்கொடுக்க முன்வந்தார். ஆனால், கெளதம் மேனனோ, என் படத்துக்கு மொத்த கால்சீட்டாக 60 நாட்கள் தர வேண்டும் என்று கேட்டார். ஆனால் விஜயசந்தர் படத்தில் நான்கு மாதங்களாக நடிக்க கால்சீட்டை பிரித்துக்கொடுத்து விட்ட விக்ரம், மொத்த கால்சீட் தருவதற்கான வாய்ப்பில்லை, மாதம் பத்து நாட்கள் வீதம் தருவதாக சொன்னாராம். ஆனால் அதற்கு கெளதம்மேனன் உடன்படவில்லை. அதனால், உடனடியாக விக்ரம் படத்தை இயக்க திட்டமிட்ட கெளதம்மேனன், விக்ரம் வேறொரு படத்திலும் கமிட்டாகியிருப்பதால் அந்த படம் முடியும் தருவாயில் இருக்கும்போது தனது படத்தை தொடங்கும் முடிவில் இருக்கிறார்.
0 comments:
Post a Comment