இந்தியா முழுவதும் உள்ள தியேட்டர்களில் இனி தேசிய கீதம் ஒளிப்பரப்பப்பட வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்போது, திரையில் தேசிய கொடியை காட்டவேண்டும் என்றும் இதில் வணிக ரீதியான ஆதாயம் எதையும் தேடக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இனி தியேட்டர்களில் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.
ஆனால், இதற்கு எல்லாம் முன்னோடியாக சென்னை, ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் காலம் காலமாக இது அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment