14 கிலோ தங்க நகை ஆடையை அணிந்து நடித்த நடிகை
26 நவ,2016 - 13:00 IST
தெலுங்கில் நாகார்ஜூனா நடித்து வரும் படம் ‛ஓம் நமோ வெங்கடேசாய'. ராகவேந்திரராவ் இயக்கி வரும் இந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், விமலாராமன் உள்பட பலர் நடித்துள்ளனர். கீரவாணி இசையமைத்துள்ள இந்த படத்தின் பிரக்யா ஜெய்ஸ்வால் சம்பந்தப்பட்ட முதல்பார்வை நேற்று வெளியானது. அதில் நாயகிகளில் ஒருவரான பிரக்யா ஜெய்ஸ்வால் 14 கிலோ தங்க நகையில் செய்த ஆடை அணிந்து நடித்துள்ள காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
மேலும், அதுகுறித்து தெலுங்கு சினிமா உலகினர் பலரும் தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அப்பட நாயகன் நாகார்ஜூனாவும், 14 கிலோ தங்கத்தில் செய்த ஆடையை கட்டிக்கொண்டு ஆடுவது கடினம். ஆனபோதும் அவர் அற்புதமாக ஆடியிருக்கிறார். அவரது நடனம் அந்த தங்கத்தை விட சுத்தமானதாக உள்ளது என்று தனது வியப்பினையும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment