Friday, November 25, 2016

அஜித் ரசிகர்களை ஆமைகள் என்று திட்டி வாங்கி கட்டிக்கொண்ட ஜி.வி.பிரகாஷ்


அஜித் ரசிகர்களை ஆமைகள் என்று திட்டி வாங்கி கட்டிக்கொண்ட ஜி.வி.பிரகாஷ்



25 நவ,2016 - 10:02 IST






எழுத்தின் அளவு:








சமூக வலைத்தளங்களின் துர்நாற்றம் தாங்க முடியாத அளவிற்கு சாக்கடையாக மாறிக் கொண்டிருக்கிறது. சில திரைப்பட நடிகர்கள், நடிகைகள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது படங்களை எளிதாக பிரமோஷன் செய்து விடலாம் என்று கனவில் இருக்கிறார்கள். டிரென்டிங்கில் வந்துவிட்டால் தங்கள் படம் 100 கோடி ரூபாயை வசூலித்து விடும் என சிறுபிள்ளைத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் இணையங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், அதிலும் குறிப்பாக அதில் இருப்பவர்கள் சினிமாவைப் பார்க்க வருவதும் மிக மிகக் குறைவே.

சமூக வலைத்தளங்களை விட்டு நட்சத்திரங்கள் சீக்கிரமே ஓட்டமெடுப்பார்கள் என்பது மட்டும் உறுதி. நேற்று திடீரென இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே டிவிட்டரில் கடுமையான மோதல் ஏற்பட்டது. ஜி.வி.பிரகாஷ் தன்னை எப்போதும் விஜய் ரசிகனாகவே தான் வெளிப்படுத்திக் கொள்கிறார். அஜித் நடித்த கிரீடம் படத்திற்குப் பிறகு அவருடைய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ஜி.வி.க்கு கிடைக்கவில்லை. ஆனால், விஜய் நடித்த தலைவா, தெறி ஆகிய படங்களுக்கு இசையமைத்து பாடல்களை ஹிட்டாக்கியுள்ளார்.

சமீபத்தில் விஜய் படத்திற்கு எப்போது வேண்டுமானாலும் இசையமைக்கத் தயாராக இருப்பேன் என ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தார். அதுதான் அஜித் ரசிகர்கள் கோபப்பட வைத்திருக்கும். ஏற்கெனவே கடவுள் இருக்கான் குமாரு படத்தால் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.வி.பிரகாஷை கடுமையாக விமர்சித்திருந்தார். நடிகர் சிம்புவும் படுதோல்விப் படங்களை எல்லாம் பிளாக்பஸ்டர் என்று சொல்வதா என ஜிவியை மறைமுகமாகத் தாக்கியிருந்தார்.

ஜி.வி.பிரகாஷை நேற்று பல அஜித் ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளால் கிண்டலடிக்க, பதிலுக்கு ஜிவியும் அவர்களை ஆமைகள் என்று சொல்லி பதிலடி கொடுக்க, இப்படியுமா சில்லறைத்தனமாக சண்டை போட்டுக் கொள்வார்கள் என யோசிக்க வைத்தது. மற்றொரு பக்கம் தனுஷை விட்டுப் பிரிந்த பிறகுதான் நான் ஹீரோவாக ஆனேன் என அவர் டிவீட் செய்திருந்தார். ஆனால், அதன் பின்னர் ஜி.வி.பிரகாஷ் அனைத்து டிவீட்டுகளையும் நீக்கிவிட்டார். நேற்றைய டிவிட்டர் சண்டையில் #FrustratedPsychoGvPrakash என்ற ஹேஷ்டேக்கை ஜி.வி.யின் எதிர்ப்பாளர்கள் டிரென்டிங்கில் கொண்டு வந்துவிட்டனர்.

இன்றைய சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இந்த அளவிற்கு மோசமாகப் போய்க் கொண்டிருப்பதற்கு ஜி.வி.பிரகாஷ் போன்றவர்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.


0 comments:

Post a Comment