Saturday, November 26, 2016

ஐஸ்வர்யா ராஜேஷின் திடீர் கண்டிசன்!









ஐஸ்வர்யா ராஜேஷின் திடீர் கண்டிசன்!



27 நவ,2016 - 08:45 IST






எழுத்தின் அளவு:








அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை படங்களுக் குப்பிறகு மார்க்கெட்டை பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டைக்கு இணையாக இடம்பொருள் ஏவல் படத்திலும் நல்ல வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் கிடப்பில கிடக்கிறது. அதையடுத்து அந்த படத்தை இயக்கிய சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்த தர்மதுரை படத்திலும் அவரது கேரக்டர் மனதில் இடம் பிடித்தது.

இந்நிலையில், தற்போது தமிழ் மட்டுமின்றி மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இதுவரை தயாரிப்பாளர்கள் தனக்கு கேரவன் வசதி செய்து கொடுக்காதபோதும் கண்டுகொள்ளாமல் நடித்து வந்தார். ஆனால், இப்போது அவருக்கென ஒரு இடம் கிடைத்து விட்டதால், சம்பளம் பேசும்போதே தனக்கு கண்டிப்பாக தனி கேரவன் வேண்டும் என்று கேட்டு வாங்கி வருகிறார். அப்படி அவருக்கு தேவையான வசதிகளை சரியாக செய்து கொடுத்தால், ஒருநாள்கூட கால்சீட் சொதப்பாமல் சொன்ன நேரத்துக்கு ஸ்பாட்டில் ஆஜராகி நடித்துக்கொடுக்கிறாராம் ஐஸ்வர்யா.




Advertisement








கே.சுபாஷ் கதையில் விஷால், கார்த்திகே.சுபாஷ் கதையில் விஷால், கார்த்தி நாகார்ஜூனாவை வியக்க வைத்த நடிகை! நாகார்ஜூனாவை வியக்க வைத்த நடிகை!






0 comments:

Post a Comment