இன்று பிற்பகல் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் கூடியது.
முதலில் சென்னை, லயோலா கல்லூரியில் நடைபெறும் என கூறப்பட்ட இக்கூட்டம் பின்னர் பல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு நடிகர் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 2,500 உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
இதில் நடைபெற்ற சம்பவங்களை தொகுத்துள்ளோம்…
சரோஜாதேவி, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட 10 பேருக்கு நடிகர்கள் பெயரில் விருது வழங்கப்பட்டது.
நடிகர் சங்க கட்டிடம் 3 ஆண்களில் கட்டி முடிக்கப்படும் என பொன்வண்ணன் கூறினார்.
சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள். இதற்கு முழு ஆதரவு கிடைத்துள்ளது என்று விஷால் கூறினார்.
மேலும் என்னுடைய திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில் முதலில் நடைபெறும். நிச்சயம் சங்க கட்டிடம் விரைவில் கட்டப்படும்.
இதுவரை சங்கம் சார்பில் வங்கி கணக்கில் ரூ. 8.50 கோடி உள்ளது.
சங்க அறக்கட்டளையில் 9 அறங்காவலர்கள் இருக்க வேண்டும். நடிகர் சங்கத்தில் நடைபெறும் தவறுகளை பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது.
0 comments:
Post a Comment