தமிழ் சினிமாவில் பாட வேண்டும் அபர்ணாவின் ஆசை
26 நவ,2016 - 10:28 IST
மலையாள நடிகை மற்றும் பாடகி அபர்ணா பாலமுரளி. மலையாள சினிமாவில் சிறு வேடங்களில் நடித்தவர் மகேஷின்ட பிரதிகாரம் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு 3 படங்களில் நாயகியாக நடித்து விட்டு தற்போது 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
வெற்றிவேல் சரவணா பிலிம்ஸ் சார்பில் எம்.வெள்ளைப்பாண்டியன் தயாரிக்கும் இந்தப் படத்தை மிஷ்கின் உதவியாளர் ஸ்ரீகணேஷ் இயக்குகிறார். இதில் அபர்ணா புதுமுகம் வெற்றிக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மைம்கோபி, மீரா மிதுன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்து வருகிறார்.
8 தோட்டாக்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த நிலையில் இன்னொரு தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு பெயர் வைக்கவில்லை. "நிறைய நம்பிக்கையோடு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறேன். 8 தோட்டாக்கள் படத்தில் எளிமையான ஒரு சராசரி பெண்ணாக நடித்திருக்கிறேன். அடுத்த வீட்டு பெண் போன்று என்னை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மலையாள சினிமாக்களில் பாடுவது போல தமிழ் சினிமாவிலும் பாட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது" என்கிறார் அபர்ணா பாலமுரளி.
0 comments:
Post a Comment