Friday, November 25, 2016

தெலுங்கு அறிமுகம், சாதிப்பாரா சிவகார்த்திகேயன் ?


தெலுங்கு அறிமுகம், சாதிப்பாரா சிவகார்த்திகேயன் ?



25 நவ,2016 - 16:25 IST






எழுத்தின் அளவு:








தமிழ்த் திரையுலகில் 'ரெமோ' படத்தின் வெற்றி மூலம் தன்னை மேலும் வளர்த்துக் கொண்ட சிவகார்த்திகேயன், தெலுங்குத் திரையுலகிலும் இன்று காலடி எடுத்து வைக்கிறார். தெலுங்கில் 'டப்பிங்' செய்யப்பட்டுள்ள 'ரெமோ' திரைப்படம் இன்று ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெளியாகிறது. தமிழில் படத்தை விளம்பரப்படுத்தியதை விட தெலுங்கில் அதிகமாகச் செலவு செய்து விளம்பரப்படுத்தி வருவதை டோலிவுட்டே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறதாம்.

கடந்த சில நாட்களாகவே நாளிதழ்களில் அரை பக்க விளம்பரம், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என அனைத்திலும் 'ரெமோ' படம்தான் நிறைந்திருக்கிறதாம். நேரடித் தெலுங்குப் படங்களுக்குக் கூட இவ்வளவு செலவு செய்ய மாட்டார்களே, ஒரு டப்பிங் படத்திற்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இருந்தாலும் சிவகார்த்திகேயன் தரப்பில் அதைப் பற்றியெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. 'ரெமோ' படத்தில் இடம் பெற்றுள்ள தரமான கலைஞர்களால் இந்தப் படம்தான் சிவகார்த்திகேயன் தெலுங்கில் அறிமுகமாக சிறந்த படமாக இருக்கும் என நினைத்துள்ளார்கள். அதனால்தான் செலவைப் பற்றிக் கவலைப்படாமல், படத்தின் முடிவைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் தெலுங்கில் அவரைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என முயற்சிக்கிறார்களாம்.

தன்னுடைய தெலுங்கு அறிமுகம் குறித்து ஆர்வமாகவும், பதட்டமாக இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 'ரெமோ' படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தைப் பாராட்டியுள்ளதாகவும், சிவகார்த்திகேயனின் பெண் வேட நடிப்பு குறித்து ரசித்தாகவும் தெரிவித்ததாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.


0 comments:

Post a Comment