“காவ்யா மாதவன் மீதான் களங்கம் துடைக்கப்பட்டுவிட்டது” - திலீப் உருக்கம்..!
26 நவ,2016 - 15:21 IST
நேற்று அதிரடியாக நடைபெற்றது மலையாள நடிகர் திலீப்-காவ்யா மாதவன் திருமணம்.. இவர்கள் திருமணம் குறித்து சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தது தான். குறிப்பாக மஞ்சு வாரியரை திலீப் விவாகரத்து செய்தப்பின்னர் அடிக்கடி இந்த செய்திகள் வெளியாகின. காவ்யா மாதவனும் தனது கணவரை விவாகரத்து செய்தபின் இவர்கள் இருவரும் மீடியாவில் கூடுதல் கவனம் பெற்றார்கள். ஆனால் இருவரும் தங்களது மறு திருமணம் செய்திகளை மறுத்தும் வந்தார்கள்.. சொல்லப்போனால் மஞ்சு வாரியர், திலீப்பை பிரிவதற்கு காரணமே காவ்யா மாதவனிடம் திலீப் காட்டிய நெருக்கம் தான் என்றும் சொல்லப்படுகிறது.. ஆனால் திலீப் - மஞ்சு இருவருமே தங்களது விவாகரத்துக்கு காவ்யா மாதவன் காரணம் இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்கள்..
ஆக விவாகரத்து செய்த திலீப், எப்படியும் மறுமணம் செய்யத்தானே போகிறார், அது ஏன் நடிகை காவ்யா மாதவனாக இருக்க கூடாது என திலீப்பின் நண்பர்களால் அவர்முன் வைக்கப்பட்டது.. திலீப்பின் மகளான மீனாட்சியும் பலமுறை திலீப்பிடம் இதை வலியுறுத்தி காவ்யா மாதவனை திருமணம் செய்துகொள்ள பச்சைக்கொடி காட்டியுள்ளார். இந்த திருமணம் குறித்து திலீப் கூறும்போது, காவ்யா மாதவன் செய்த ஒரே தவறு என்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தது மட்டும் தான்.. அதனால் தான் தேவையில்லாத விமர்சனங்களுக்கு ஆளாகினார். இப்போது அவர் மீதான களங்கம் துடைக்கப்பட்டுவிட்டது” என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment