கீர்த்தி சுரேஷை கவர்ந்த இயக்குனர்கள்!
30 நவ,2016 - 09:13 IST
ரஜினிமுருகன், ரெமோ படங்களுக்கு பிறகு விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக தமிழில் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நானியுடன் நேனு லோக்கல் படத்தில் நடித்து விட்டவர், அடுத்தபடியாக தீவிரமாக கதை கேட்டு வருகிறார். முன்னணி ஹீரோக்களின் படம் என்றாலும், கதையில் தனக்கான பங்கு என்ன என்பதை டைரக்டர்களிடம் துருவி துருவி கேட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்த நிலையில், தன்னை கவர்ந்த டைரக்டர்களான மணிரத்னம், கெளதம் மேனன் உள்பட சில முன்னணி டைரக்டர்களின் பெயரை பட்டியலிட்டுக்கொண்டு அவர்களின் படங்களில் நடிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். இதில், தற்போது கார்த்தியை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தின் ஆடிசனுக்கு சென்றபோது கீர்த்தி சுரேஷ் செலக்ட் ஆகவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் அவர் இயக்கத்தில் நடித்து விடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அதேபோல் கெளதம்மேனனையும் அடுத்த டார்கெட்டாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், அவர் இயக்கி வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தை பார்த்துவிட்டு உடனே அவருக்கு போன் செய்து படத்தில் தன்னை கவர்ந்த விசயங்களை பகிர்ந்து கொண்டாராம் கீர்த்தி சுரேஷ். அப்போது அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்ற தனது ஆசையையும் தெரிவித்துள்ளாராம்.
0 comments:
Post a Comment