திரைப்படமான குறும்படம்
28 நவ,2016 - 10:54 IST
என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக பல குறும்படங்களை தயாரித்தார்கள். அதில் ஒன்று என் அன்புக்குரியவளே. இந்த குறும்படம் பரவலான பாராட்டுகளை பெற்றது. கல்லூரி போட்டிகளில் பரிசு வென்றது. இதனால் இதனை திரைப்படமாக தயாரிக்க விரும்பினார்கள்.
குறும்படத்தை இயக்கிய சிவராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கினார். படத்திற்கு காதல் கண்கட்டுதே என்ற பெயர் வைக்கப்பட்டது. குறும்படத்தில் நடித்த கே.ஜி, அதுல்யா ஆகியோர் இதிலும் ஹீரோ, ஹீரோயினாக நடித்தார்கள். பவன் இசை அமைத்தார். பி.தேவா தயாரித்தார்.
"என் அன்புக்குரியவளே குறும்படத்தை பார்த்த எல்லோருமே இதை திரைப்படமாக எடுங்கள் என்று கூறினார்கள். அதனால் தயாரிப்பில் இறங்கினோம். குறும்படத்தில் காதல் மட்டும் இருந்தது. அதோடு காமெடி, சண்டை, பாடல்கள் சேர்த்து திரைப்படமாக்கினோம். கோவை, பொள்ளாச்சி, ஊட்டி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம். எதிர் எதிர் குணாதிசயங்கள் கொண்ட காதலர்களின் மோதலும், கூடலும்தான் கதை. இன்றைய இளையஞர்களின் காதலை யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் சிவராஜ்.
0 comments:
Post a Comment