நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தலைமையில் இன்று நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதுஒரு புறம் அங்கே நடந்து கொண்டிருக்கும் வேளையில் வடபழனியில் உள்ள விஷால் அலுவலும் மீது மர்மநபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் அங்கே வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கார் மீது தாக்குதல் நடத்தி கண்ணாடி அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதுபோல் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸின் கார் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
சரத்குமார், ராதாரவி ஆகியோரை சங்கத்தில் இருந்து நீக்கியதால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும் முன்னாள் நிறுவனர்களின் ஆதரவாளர்களால் பொதுக்கூட்டத்திலும் பெரும் கைகலப்பு ஏற்பட்டது.
0 comments:
Post a Comment