அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் நட்டி நடிக்கும் படங்கள்
23 நவ,2016 - 17:04 IST
ஒளிப்பதிவாளர் 'நட்டி' நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் - 'எங்கிட்ட மோதாதே'. இந்தப் படம் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் தவிர நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள மற்றொரு படம் 'போங்கு'. சதுரங்க வேட்டை படத்தைப் போலவே டுபாகூர் பார்ட்டியைப்பற்றிய கதை இது. அதாவது, விலை உயர்ந்த கார்களை 'ஹைடெக்' ஆக திருடும் நான்கு பேரை பற்றிய கதை. கார் திருடுபவர்களில் ஒருவராக நட்டி நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் கதை அம்சம் கொண்ட இப்படத்தை கலை இயக்குனர் சாபு சிரிலிடம் உதவியாளராக பணிபுரிந்த தாஜ் இயக்கியுள்ளார்.
இந்தப்படமும் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. போங்கு படத்தை நேற்று சென்சாருக்கு அனுப்பினார்கள். படத்தைப் பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு 'யு' சர்டிஃபிகேட் வழங்கியிருக்கிறார்கள். ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பாக திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவர் இணைந்து தயாரித்துள்ள 'போங்கு'படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். எங்கிட்ட மோதாதே படம் வெளியானதும் அதற்கடுத்த வாரத்தில் போங்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment