Wednesday, November 23, 2016

பவர்ஸ்டாரை வீழ்த்திய மொட்டை ராஜேந்திரன்!


பவர்ஸ்டாரை வீழ்த்திய மொட்டை ராஜேந்திரன்!



23 நவ,2016 - 09:05 IST






எழுத்தின் அளவு:








கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு முன்னணி காமெடியனாக வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் பவர்ஸ்டார். ஆனால், அதன்பிறகு சில மோசடி வழக்குகளில் சிக்கிய அவர் சிறை சென்று விட்டார். அதுவே அவரது வளர்ச்சிக்கும் தடையாக அமைந்தது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தொடர்ந்து நடித்தபோதும் அவரது காமெடி பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. இந்த நிலையில், மோகனா -என்றொரு திரில்லர் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வந்தார் பவர்ஸ்டார். அதேபடத்தில் காமெடி வில்லனாக மொட்டை ராஜேந்திரன் நடித்தார்.

ஆனால், தற்போதைய நிலவரப்படி மொட்டை ராஜேந்திரனின் மார்க்கெட்டே முன்னணியில் இருப்பதால், கதையின் நாயகனாக நடித்த பவர்ஸ்டாரின் கேரக்டரை டம்மி பண்ணி விட்டு, மொட்டை ராஜேந்திரனை கதையின் பிரதானமாக்கி விட்டனர். கூடவே அவருக்கு ஒரு ஜோடியையும் சேர்த்து விட்டனர். அதனால் அந்த நடிகையுடன் ஒரு குத்துப்பாட்டுக்கும் நடனமாடியுள்ள மொட்டை ராஜேந்திரனே அந்த படத்தின் பப்ளிசிட்டிகளில் முக்கியத்துவம் பெறப்போகிறாராம். இதனால் வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு ஹீரோ என்னை டம்மி பண்ணி விட்டார்களே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் பவர்ஸ்டார்.


0 comments:

Post a Comment