இளமியில் ஜமீன்தாராக கிஷோர்
22 நவ,2016 - 14:16 IST
300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வடம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு தயாராகி உள்ள படம் இளமி. இதில் சாட்டை யுவன், அனுகிருஷ்ணா, ரவிமரியா, கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். யுகா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகாந்த தேவா இசை அமைத்துள்ளார். இது ஜல்லிகட்டின் பெருமை பேசுகிற படம் வருகிற 25ந் தேதி வெளிவருகிறது. இதில் கிஷோர், பாண்டிய மன்னனுக்கு உட்பட்ட ஜமீன்தாராக நடித்துள்ளார். தமிழில் கிஷோர், ஜமீன் வேடத்தில் நடித்துள்ள முதல் படம் இது.
"ஜல்லிக்கட்டுக்கு தடை இருப்பதால் படத்துக்கும் தடை விதிப்பார்கள் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் அதையும் தாண்டி படம் வெளிவருகிறது. பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடக்காது என்றே தோன்றுகிறது. ஆனால் இளமி படத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை லைவாக படமாக்கி இருக்கிறோம். ஜல்லிக்கட்டின் அருமை, பெருமை பற்றியும், தமிழனின் வீரத்தை பறை சாற்றும் விதமாகவும் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். நிச்சயம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் என்றார்" இயக்குனர்.
0 comments:
Post a Comment