தமிழில் 6 படம் ; நிவின்பாலியின் 2017 டார்கெட்..!
22 நவ,2016 - 16:10 IST
மலையாள திரையுலகில் நிலையான மார்க்கெட்டை பிடித்ததுடன், இவர் நடித்தால் படம் ஹிட் என்கிற ராசியான பெயரை பெற்றுவிட்டார் இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி. கடந்த வருடங்களில், வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறு படங்களை கொடுத்துவந்த நிவின்பாலி, இப்போது தனது படங்களை தேர்ந்தெடுப்பதில், நடிப்பதில் நிதானம் காட்டி வருகிறார். அதனால் தான் இந்த வருடம் அவர் நடித்து இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின.. ஆனால் இரண்டுமே 100 நாட்களை தாண்டி ஒடி வெற்றியும் பெற்றன.
மலையாளத்தில் தற்போது மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கும் நிவின்பாலி, தமிழில் வரும் 2017க்குள் ஆறு படங்களை ரிலீஸ் செய்துவிட திட்டம் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கேற்ற மாதிரி தற்போது கௌதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கத்தில் தமிழில் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்ததாக டைரக்டர் அட்லி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் சூர்யா பாலகுமார் என்பவரது டைரக்சனிலும் நடிக்க இருக்கிறார். இதுதவிர இயக்குனர் கௌதம் மேனன் தான் வாங்கி வைத்திருக்கும் தெலுங்குப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நிவின்பாலியை நடிக்கவைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆக தமிழ் திரையுலகில் நிவின்பாலியின் டிமாண்ட் அதிகரித்து வருவது என்னவோ உண்மை.
0 comments:
Post a Comment