அரைடஜன் படங்களில் சிருஷ்டிடான்கே!
22 நவ,2016 - 08:27 IST
தமன்னா, ஹன்சிகா வரிசையில் மும்பையில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் சிருஷ்டி டான்கே. வந்த வேகத்திலேயே பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். ஆனால் அவர் நடித்த படங்கள் ஹிட் கொடுக்காததால் மார்க்கெட்டில் முன்வரிசைக்கு இன்னும் வரமுடியாமல் போராடிக்கொண்டிருக்கிறார் சிருஷ்டி. ஆனபோதும், தர்மதுரை படத்தின் வெற்றி அவருக்கு பல படவாய்ப்பு களை பெற்றுக்கொடுத்து இப்போது பிசியான நடிகையாகியிருக்கிறார் சிருஷ்டி டான்கே.
அந்த வகையில், அச்சமின்றி, ஒரு நொடியில், காலக்கூத்து, முப்பரிமாணம், சத்ரு, சரவணன் இருக்க பயமேன் என பல படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த படங்களில் சில படங்களில் மரத்தை சுற்றி டூயட் பாடினாலும், சில படங்களில் அழுத்தமான நாயகியாகவும் நடித்து வருகிறார். முக்கியமாக இதுவரை அழகு பொம்மையாக மட்டுமே காண்பிக்கப்பட்ட சிருஷ்டி டான்கேவிற்கு அழுது பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய வெயிட்டான வேடங்களையும் கொடுத்துள்ளார்களாம். அதனால், மூன்றாம்தட்டு நடிகர்களுடனேயே நடித்து வரும் சிருஷ்டி, அடுத்தபடியாக முன்னணி நடிகர்களின் படங்கள் தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார்.
0 comments:
Post a Comment