Tuesday, November 22, 2016

தியேட்டர்களை அதிர வைப்பாராம் ஞானசம்பந்தன்!


தியேட்டர்களை அதிர வைப்பாராம் ஞானசம்பந்தன்!



23 நவ,2016 - 08:22 IST






எழுத்தின் அளவு:








பட்டிமன்ற நடுவர், நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என பலமுகம் கொண்டவர் ஞானசம்பந்தன். இவர், தான் கலந்து கொள்ளும் எந்த மேடைகளில் பேசினாலும் அவர் பேசி முடிக்கும்வரை ரசித்து கேட்பார் கமல். அந்த வகையில், ஞானசம்பந்தம் கமலின் நடிப்புக்கு ரசிகர் என்றால், கமல் ஞானசம்பந்தத்தின் நகைச்சுவை பேச்சுக்கு ரசிகர். அதில் கவரப்பட்ட கமல், தான் நடித்த விருமாண்டி படத்தில் ஞானசம்பந்தத்தை நடிகராக அறிமுகம் செய்தார்.

அதைத் தொடர்ந்து அப்பா, போலீஸ், அமைச்சர் என பலதரப்பட்ட கேரக்டர்களில் பல படங்களில் நடித்துள்ள ஞானசம்பந்தன், கேரள நாட்டிளம் பெண்களுடனே என்ற படத்தில் ஹீரோவுக்கு அப்பாவாக முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கொம்பன், உத்தமவில்லன், மருது, ரஜினிமுருகன், தொடரி என பல படங்களில் நடித்த ஞானசம்பந்தன், தற்போது ரங்க ராட்டினம் என்ற படத்தில் நாயகியின் அப்பாவாக நடித்து வருகிறார்.

என்னதான் செண்டிமென்ட் வேடம் என்றாலும், அவர் சிறந்த நகைச்சுவை பேச்சாளர் என்பதால் காமெடி பகுதியையும் அவருக்கே ஒதுக்கி விட்டார்களாம். அதனால் இந்த படத்தில் செண்டிமென்ட், நகைச்சுவை என இரண்டையும் கலந்து நடித்துள்ளாராம். அதனால் ஞானசம்பந்தத்தின் நடிப்புக்கு ஸ்பாட்டிலேயே ஏகப்பட்ட கைதட்டல் கிடைத்ததாம். அதனால் ரங்க ராட்டினம் படம் திரைக்கு வரும்போது அவரது நகைச்சுவையில் தியேட்டர்களே அதிரும் என்கிறார்கள்.



0 comments:

Post a Comment