Tuesday, November 22, 2016

நிருபர்களுக்கு பதிலளிக்காமல் கேள்வி கேட்ட ரஜினிகாந்த்


rajiniஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் ஓரிரு தினங்களுக்கு முன் மும்பையில் வெளியிடப்பட்டது.


இவ்விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், பின்னர் சென்னை திரும்பினார்.

அப்போது ரஜினியை சுற்றி வளைத்த பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை கேட்டனர்.

அதில்…
500, 1000 ரூபாய் நோட்டுகள் தடைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் சந்திக்க செல்வீர்களா?

கருணாநிதியும் உடல் நலமில்லாமல் இருக்கிறாரே அவரையும் சந்திப்பீர்களா?

என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டே பின்னால் வந்தனர்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்காத ரஜினி, “2.ஓ பர்ஸ்ட் லுக் பார்த்தீங்களா நல்லா இருந்துச்சா?” என்று நிருபர்களை கேட்டு விட்டு கிளம்பிச் சென்றார் சூப்பர் ஸ்டார்.

0 comments:

Post a Comment