'ஸ்லிம்' லட்சுமி!
24 நவ,2016 - 04:21 IST
வரலட்சுமியை பார்க்கும் அனைவருமே, 'தாரை தப்பட்டையில் நடித்த வரலட்சுமியா இது என, ஆச்சரியத்துடன் கேட்கும் அளவுக்கு, அநியாயத்துக்கு ஸ்லிம் லட்சுமியாக காட்சியளிக்கிறார். ஹீரோயினாக நடிப்பதற்கு, தன் உடல்வாகு, ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காகத் தான், கடுமையாக உடற்பயிற்சி செய்து, உடம்பை குறைத்து உள்ளாராம் அவர். எதிர்பார்த்தது போலவே, சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தின் வாய்ப்பு, அவரை தேடி வந்துள்ளது. இன்னும் சில நாட்களில், மேலும் சில அறிவிப்புகள் வரலாமாம். எவ்வளவு பிசியாக இருந்தாலும், தன் நட்பு வட்டாரத்தை தக்க வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் வரு.சமீபத்தில், அச்சம் என்பது மடமையடா திரைப்படத்துக்காக, சிம்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், த்ரிஷாவுடன் இணைந்த பங்கேற்றார் வரலட்சுமி.
Advertisement
0 comments:
Post a Comment