சென்னையில் ஐரோப்பிய யூனியன் பட விழா
21 ஏப்,2017 - 10:32 IST
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் பங்கேற்கும் ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா வருகிற 22ந் தேதி முதல் மே 4ந் தேதி வரை 9 நாட்கள் சென்னையில் நடக்கிறது. இதில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஹங்கேரி, போலந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்த்ரியா, டென்மார்க், பல்கேரியா, போர்ச்சுக்கல், உள்ளிட்ட 22 ஐரோப்பிய நாடுகளின் படங்கள் திரையிடப்படுகிறது.
முதன் முதலாக புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை கலைவாணர் அரங்கில் இதன் தொடக்க விழா நடக்கிறது. தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைக்கிறார். கலைவாணர் அரங்கம் தவிர மேக்ஸ்முல்லர் பவன், அல்லையன்ஸ் பிரான்சைஸ், ஆகிய இடங்களிலும் திரைப்பட விழா நடக்கிறது.
0 comments:
Post a Comment