Thursday, April 20, 2017

பேர்&லவ்லி-கோலா விளம்பரங்களில் நடித்ததற்கு வெட்கப்படுகிறேன் – ஸ்ரேயா

shriyaரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், தனுஷ்டன் திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரேயா.


தற்போது சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்துவருகிறார்.


இந்நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவரிடம் அழகு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு… “நம் நாட்டு மக்களிடம், அழகு பற்றிய புரிதல் தவறாக உள்ளது. அழகில்லை என்பதால் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்காமல் இருக்கிறதாக விளம்பரங்களில் காட்டப்படுகிறது.


அதன்பின்னர் ஒரு பிராண்ட் க்ரீமைப் பயன்படுத்திய பிறகு, அந்த பெண் அழகாகி, திருமணம் நடப்பது போல் காட்டப்படுகிறது.


இதனால் மக்கள் முட்டாள்தனமாக யோசிக்கின்றனர்.


நானும் இதுபோன்ற பேர் அண்ட் லவ்லி மற்றும் கோகோ கோலா விளம்பரங்களில் நடித்துள்ளேன்.


அதற்கு தற்போது எனக்கு வெட்கமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.” என்றார் ஸ்ரேயா.

0 comments:

Post a Comment