Friday, April 21, 2017

ப.பாண்டி 2-ஆம் பாகம் எடுக்க சொல்லும் கெளதம்மேனன்


ப.பாண்டி 2-ஆம் பாகம் எடுக்க சொல்லும் கெளதம்மேனன்



22 ஏப்,2017 - 10:03 IST






எழுத்தின் அளவு:








சமீபகாலமாக நடிகர் நடிகைகள் மட்டுமின்றி இயக்குனர்கள் மத்தியிலும் நல்ல ஆரோக்யமான நட்பு நிலவி வருகிறது. ஒருவரது படைப்பை இன்னொரு புகழ்ந்து பேசுவது. கருத்து சொல்வது என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில், நடிகர் தனுஷின் ப.பாண்டி படம் வெளியானபோது கே.வி.ஆனந்த், எஸ்.ஜே.சூர்யா உள்பட பல இயக்குனர்களே அந்த படத்தின் கதையை பாராட்டினர்.

அதேபோல் தற்போது தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வரும் கெளதம்மேனனும் ப.பாண்டி படத்தை வெகுவாக பாராட்டியிருக்கிறார். அதோடு, கிளைமாக்சில் பிரிந்த ப.பாண்டி, பூந்தென்றல் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதை அறிய ஆவலாக உள்ளது. அதனால் ப.பாண்டியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார் கெளதம்மேனன்.


0 comments:

Post a Comment