Wednesday, March 29, 2017

துாங்கிய நடிகர் யார்?


துாங்கிய நடிகர் யார்?



30 மார்,2017 - 00:08 IST






எழுத்தின் அளவு:








பந்தா இல்லாத, எளிமையான நடிகர் என்ற பெயர், விஜய் சேதுபதிக்கு உண்டு. கவண் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்தும், தற்போது இந்த செய்தியை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆனந்த், 'சுயநலம் சிறிதும் இல்லாத நடிகர் விஜய் சேதுபதி. படத்தில் வரும் மற்ற கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருப்பார்' என்றாராம். இதில், இன்னும் ஒரு சுவராசியமான தகவலும் உண்டு. இந்த படத்தின் கதையை, பல நடிகர்களிடம் கூறினாராம் இயக்குனர். அப்போது ஒரு நடிகர், 'இன்னும் சில சண்டை காட்சிகள் இருந்தால் மட்டுமே நடிப்பேன்' என்றாராம். மற்றொரு நடிகரோ, கதையை கேட்கும்போதே துாங்கி விட்டாராம்.


0 comments:

Post a Comment