Saturday, March 25, 2017

தயாரிப்பாளர் மீது நடிகை புகார் பாலியல் தொந்தரவு எதிரொலி


தயாரிப்பாளர் மீது நடிகை புகார் பாலியல் தொந்தரவு எதிரொலி



26 மார்,2017 - 10:29 IST






எழுத்தின் அளவு:








பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது, நடிகை ஷில்பா ஷிண்டே, 39, புகார் கொடுத்துள்ளார்.மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சஞ்சீவனி, அமர்பலி உட்பட, ஏராளமான, ஹிந்தி, டிவி தொடர்களில் நடித்துள்ளார். சஞ்சய் கோஹ்லி என்பவர் தயாரித்து வரும், பாபி ஜி கர் பர் ஹை என்ற நகைச்சுவை தொடரிலும், ஷில்பா நடித்து வந்தார். ஒப்பந்தத்தில் பிரச்னை ஏற்பட்டதையடுத்து, இந்த தொடரிலிருந்து, சமீபத்தில், ஷில்பா விலகினார்.இதனால், தங்களுக்கு, 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, ஷில்பா மீது, தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தயாரிப்பாளர் சஞ்சய் கோஹ்லி மீது, ஷில்பா ஷிண்டே, போலீசில் புகார் கொடுத்துள்ளார்.இகுறித்த, ஷில்பா ஹிண்டே கூறியதாவது:தொடரில் நடிக்க வாய்ப்பு வழங்கியதை வைத்து, என்னிடம் தவறாக நடக்க, சஞ்சய் கோஹ்லி முயற்சித்தார். ஆனால், நான் மறுத்துவிட்டேன்.

இதனால், தொடரிலிருந்து நீக்கிவிடுவதாக மிரட்டல் விடுத்தார். தயாரிப்பாளர் சஞ்சய் கோஹ்லி, எனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதை, எனக்கு மேக் அப் போடும், பிங்கு, பார்த்து விட்டார். இதனால், அவரை, பணியிலிருந்து நீக்கிவிட்டார். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.இதற்கிடையே, ஷில்பாவின் குற்றச்சாட்டை, கோஹ்லியின் மனைவி மறுத்துள்ளார்.


0 comments:

Post a Comment